அன்புடை செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!

“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து” என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப
நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் இடையில் பாலமாக விளங்கி, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன் பணிவிடைகள் பலசெய்து மருந்துகளைக் காலம் தவறாமல் வழங்குவதோடு, கனிவு மிக்கச் சொற்களால் தானே நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் திகழ்கின்ற செவிலித்தாய்களை உலகச் செவிலியர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்!

தன்னலம் கருதா இணையற்ற மருத்துவச் சேவையால் உயிர்களைக் காக்கும் உன்னதப் பணி மேற்கொள்ளும் அன்புடை செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.