தேர்தல்

  • பொதுத்தொகுதியில், பட்டியலின வேட்பாளர்களை நிறுத்தியது; 
  • பெண்களுக்கு சரிபாதி இடங்களில் வாய்ப்பளித்தது; 
  • ஒரு சமூகம் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பெரும்பான்மையாக இருந்தால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவரைத் தவிர்த்துவிட்டு, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது; 
  • திருநங்கையை (மூன்றாம் பாலினத்தவர்) வேட்பாளராக்கியது;
  • அரசியல் ரீதியாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை, “சமூகநீதி பாதுகாவலர்கள்” என்று மார்தட்டிக்கொள்ளும் திராவிட காட்சிகளே புறக்கணிக்க, நாம் தமிழர் கட்சி மட்டுமே நம் இன சொந்தங்களை போட்டியிட வாய்ப்புக் கொடுத்தது;
  • இந்திய ஒன்றியத்ததின் மிகவும் தேவையான தெளிவான சரியான தேர்தல் சீர்திருத்தங்களை பலவற்றை முன்வைத்தது;
  • பல தேசிய இனங்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தை சுழற்சி முறையில் மொழிவழி மாநிலக் கட்சிகள் ஆளுவது;
  • தொகுதிகள் பல மறுவரைவுக்கு உட்படுத்தி இந்திய ஒன்றியம் முழுவதும் புதிய தொகுதிகளை உருவாக்குவது;
  • ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்கின் விகிதத்தின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களாக அமரச் செய்தல்; 
  • நம்பகத் தன்மையற்ற வாக்கு எந்திரத்திற்கு மாற்றாக பழைய நம்பகத் தன்மையுடைய வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வாக்களிப்பது;

சீமான்

சீமான்

இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!

*ஈழ விடுதலை எம்  இனத்தின் விடுத்லை என்றும் ,  எடுவர் விடுதலை இல்லாது இனத்தின் விடுதலை வெல்லாது என்று திரு. சீமான் முழங்க தொடங்கிய பிறகே மிகப்பெரிய மக்கள் ஆதரவு திரண்டு இந்த மண்ணில் ஆதரவான தீர்மானங்கள் ஆட்சியாளர்களால் அரங்கேற தொடங்கின.

*   இனமுன்னோர்கள், தமிழ் தலைவர்கள் குறித்து திரு. சீமான் செய்த கற்பிதங்களுக்கு பிறகே  தமிழ்  மண்ணில்  சாதிய இறுக்கங்கள் குறைந்து தமிழர் ஓர்மை உருவாகத் தொடங்கியது.

*தமிழ் மண்ணை யார் எல்லாம் ஆண்டார்கள், யார் ஆளவேண்டும் என்று திரு. சீமான் எடுத்த அரசியல் வரலாறு தமிழர் அல்லாதார் யாரும் இம்மண்ணை ஆள நினைக்க முடியாத அளவிற்கு தடுத்து நிறுத்தியது.  

*எழுபதாண்டு சமூகநீதியில் சாதனை படைத்த திராவிடக் கட்சி திருநங்கைகளை உறுப்பினராக்க உத்தரவு அளித்த நேரத்தில் திருநங்கையைச் சட்டமன்ற வேட்பாளராக்கி மூன்றாண்டுகள் முடித்திருந்த வரலாறு நாம் தமிழர் கட்சியினுடையது. 

* நாங்கள் உயிர்நேய வாதிகள் என்று அரசியலுக்குப் புது அர்த்தம் எழுதி திரு. சீமான் எடுத்த அரசியல் வகுப்பு குருதிக்கொடை பாசறையாகி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

*அரசியல் அனைத்து உயிர்க்குமானது என்று தேனீயிலிருந்து யானைவரை திரு. சீமான்  கற்பித்த அரசியல் சுற்றுச்சூழல் பாசறையாகி மரம்வளர்ப்பில் முதலிடத்தைப் பெற்றுத் தந்தது.

* நெய்தல் படை குறித்து திரு. சீமான் வெளியிட்ட அரசியல் பேரறிவிப்பு  இன்றைக்கு  கேரளாவில் மீனவர் மீட்பு படையாக உருவாகியுள்ளது

* மண்ணின் மைந்தருக்கே மண்ணின் வேலை சீமானின்  கொள்கை முழக்கம் இன்றைக்கு  கர்நாடாகா, மத்திய பிரதேசத்தில்  80 % ஒதுக்கீடாகி உள்ளது.

* அரசு பள்ளியிலேயே அரசு ஊழியர் குழந்தைகள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்புக்கு முன்னோடியாக  2016 ஆட்சி செயற்பாட்டு வரைவிலேயே திரு. சீமான்  கொடுத்திருந்தார்.  

* காவலருக்குச் சுழற்சி முறையில் பணி என்ற சீமானின்  அறிவித்து பல ஆண்டுகளுக்கு பிறகே  எட்டுமணி நேர வேலை உத்தரவு ஆந்திராவில் அறிமுகமானது.