History

சீமானின்

அரசியல் பயணம்

அரசியல் பயணம்

தனது 26 வயது முதலே அரசியல் செயல்பாடும், மேடைப்பேச்சுக்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். திரு. சீமானின் ஊரான அரணையூரிலிருந்து தேவிபட்டணம், மண்டபம் போன்ற ஈழ உறவுகள் தஞ்சம்புகுந்த இடங்கள் அருகாமையில் இருந்தபடியால் உறவுகளுடனான பழக்கங்கள் ஏற்பட்டன, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைபற்றியும், வைக்கோவின் பேச்சுக்களிலும் ஆர்வம் காட்டினார்.

1996

திராவிட இயக்கங்களில் இணைந்து பணியாற்றினார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட நாத்தீகராக செயல்பட்டார், சாதியத்தையும் பார்ப்பனீயத்தையும் வலுவாக எதிர்த்தார். காங்கிரசு கட்சிக்கு ஆதரவளிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். 1999–2001 காலகட்டத்திலேயே விடுதலைப்புலிகளை ஆதரித்து செயல்பட்டார்.

1998

புலிகளின் கொளத்தூர் பயிற்சி முகாமில் பயிற்சிபெற்றார். உந்து உருளியணியிலும் தொடர்ந்தார். கொளத்தூர்மணியுடன் திராவிட கொள்கைகளை முன்னெடுத்து வந்த நிலையிலும் பழநெடுமாறனை தொடர்ந்து புலிகளுக்கு ஆதரவளித்து உதவிய உறுதியான மனிதர்களுள் ஒருவராக இவர் திகழ்ந்தார்.

2002 -2005

பெரியாரிய மேடைகளில் தமிழ்தேசிய அரசியலை பேசிவந்தார், குறிப்பாக விடுதலைப்புலி பிரபாகரனையும் மேடைதோறும் ஆதரித்து பேசினார். கோக்,பெப்சி போன்ற அந்நிய குளிர்பான நிறுவனங்களை எதிர்த்து வந்தார். கனடிய "ஈழமுரசு" பதிப்பு நடத்திய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 53 ஆவது பிறந்த நாள் விழாவில் திரு. சீமானை "ஈழமுரசு" குடும்பத்தினர் கனடாவில் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

2006

கனடாவில் தேசியத் தலைவரின் 53 ஆவது பிறந்த நாள் விழா

2007

இராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் ஈழப்போரில் இலங்கைக்கு ஆதரவளித்த இந்திய அரசுக்கு எதிராக திரு. சீமான் பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் சீமானின் பேச்சைக்கேட்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சீமானுக்கு தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்ததாக சொல்லப்பட்டது. திரு. சீமானின் மற்ற மேடைகளினின்று இந்த இராமேஸ்வர மேடை தனித்து காணப்பட்டதற்கு காரணம் தமிழ்நாட்டில் ''தமிழ்தேசியம்'' பிறந்துவிட்டதாக மேடையில் திரு. சீமான் முழங்கியதுதான். (இராமேஸவரம் உரை) இந்த பேச்சிற்காக காங்கிரசு-திமுக அரசால் கைதும் செய்யப்பட்டார். எதிர்க்கட்சியான அதிமுகவும் திரு. சீமானை கைதுசெய்யும்படி சட்டமன்றத்தில் தனது எதிர்ப்பினை பதிவுசெய்தது.

2008

சீமான்

சீமானின் ஈழப்பயணம்

2008ஆம் ஆண்டு போர்சுசூழலில் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்து வந்தார்.ஈழத்திற்கு வந்த திரு. சீமான் கிளிநொச்சியில் தங்க வைக்கப்பட்டார். தலைவருடனான சந்திப்பும் நடந்தது. போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு முன்னால் உரையாற்றும் வாய்ப்பும் சீமானுக்கு வழங்கப்பட்டது.கிளிநொச்சியில் அமைந்திருந்த தமிழீழ நுண்கலைக் கல்லூரியின் மண்டபத்தில் திரு. சீமான் உரையாற்றினார். தந்தை பெரியாரையும் தலைவர் பிரபாகரனையும் ஒப்பிட்டு திரு. சீமான் பேசினார். அன்று தந்தை பெரியார் தமிழர்களுக்கு எப்படியான போராட்டங்களை நடத்தினார் என்பதை விளக்கினார்.  தலைவர் பிரபாகரன் நடத்துகின்ற போராட்டம் பற்றி புகழ்ந்துரைத்தார். உரைகளை எல்லாம் கிளிநொச்சியில் நிகழ்த்தி விட்டு,திரு. சீமான் தமிழ்நாடு திரும்பினார்.