எண்ணற்ற இன்னிசைப்பாடல்களால் மக்களின் மனங்களை மகிழச்செய்த திரையிசைப்பாடலாசிரியரும், கவிஞருமான ஐயா பிறைசூடன் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

எளிய மொழி நடையில் திரையிசைப் பாடல்களை மனம் கவரும் வகையில் வடித்துத்தந்த மாபெரும் வித்தகர். தனக்கென திரையுலகில் தனியிடத்தைப் பிடித்து, காலங்கடந்தும் நிலைத்து நிற்கும் பாடல்களை இயற்றிய ஐயா பிறைசூடன் அவர்களது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கே ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு. கண்ணீர் வணக்கம்!

சீமான்,

தலைமை ஒருங்கிணைப்பாளர்,

நாம் தமிழர் கட்சி.

 

 

Leave a Reply

Your email address will not be published.