எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் அன்புச்சகோதரர் முபாரக் அவர்களுடைய தாயார் ஷெரிஃபா பீவி அம்மையார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்!

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் அன்புச்சகோதரர் முபாரக் அவர்களுடைய தாயார் ஷெரிஃபா பீவி அம்மையார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

பெற்றெடுத்து பேணி வளர்த்த அன்னையின் இறப்புச்செய்தி கிடைத்த பின்னும், மனந்தளராது சென்னையில் ஆளுநரைத் திரும்பபெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி இன்று முன்னெடுத்த பேரணியில் பங்கெடுத்த சகோதரர் முபாரக்கின் நெஞ்சுரமிக்க பொதுவாழ்வு
போற்றுதற்குரியது.

அன்பு அன்னையின் மறைவால் துயருற்றுள்ள தம்பி முபாரக்கிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.