சீமான்

திரைத்துறை வாழ்க்கை

 கல்லூரி முடிந்த பின் ஐயா பாரதிராஜாவின் எளியமக்களின் வாழ்வியலை மண்மணம் மாறாத வட்டார மொழியில் வடித்த திரை ஓவியங்களால் ஈர்க்கபட்டு எளியமகனான தானும் திரைப்பட இயக்குனராக வேண்டும் , மானுட தத்துவங்களை திரைபடங்களாக படைக்க வேண்டும் என்னும் கனவோடு 1991ஆம் ஆண்டு சென்னை சென்றார். அங்கு மணிவண்ணன், பாரதிராஜா போன்ற முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். 

இவரின் முதல் படமான பிரபு, மதுபாலா போன்றோர் நடிகர்களாக கொண்டு இயக்கிய “பாஞ்சாலங்குறிச்சி” திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதித்தது. 

 

மீண்டும் பிரபுவைக் கொண்டு இயக்கிய “இனியவளே” படம் மூலம் 1997ஆம் ஆண்டு கவிஞர் தாமரையை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் திரு. சீமான். பிறமொழி கலவாமல் தனித்தமிழில் பாடல்கள் எழுதி தமிழ்த்திரையுலகில் உச்சம் கண்டவர்  கவிஞர் தாமரை. 

 1997ஆம் ஆண்டில் வெளிவந்த “வீரநடை” படத்தின் மூலமாக சீமானின் நண்பரும் அறைத்தோழருமான கவிஞர் நா.முத்துக்குமாரை அறிமுகப்படுத்தினார். 

கவிதைகளை எழுதிவந்த நா.முத்துக்குமாரை திரைப்படபாடல் ஒன்றை எழுதச்சொல்லி தனது படத்தில் வாய்ப்பினை கொடுத்தார் திரு. சீமான்.

 

2006ஆம் ஆண்டில் இவர் இயக்கிய ''தம்பி'' திரைப்படம் சிறப்பான வெற்றியை பெற்றது. தம்பி திரைப்படம் இளைஞர்களை எழுச்சியூட்டும் விதமான காட்சிகளை கொண்டிருந்தது . ''வன்முறை மீது விருப்பமற்ற ஒருவன் மீது, வன்முறை ஏவப்பட்டால் என்ன நடக்கும்'' என்பதை கதையின் கருவாக அமைத்திருந்தார். மேதகு பிரபாகரனை ஈழத்தமிழர்கள் அழைக்கும் ''தம்பி'' என்ற பெயரை படத்திற்கும் , ''தம்பி வேலு'' என்ற பிரபாகரனின் பெயரையே (தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன்) கதாநாயகனுக்கும் சூட்டியிருந்தார்.

மீண்டும் நடிகர்  மாதவனை கதாநாயகனாக வைத்து இயக்கிய படம் “வாழ்த்துகள்”. இப்படம் முழுவதும் கலப்படமற்ற தூயத்தமிழ் வசன நடைக்கொண்டு உருவாக்கியிருந்தார். 

மாயாண்டி குடும்பத்தார், பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.

அரசியல் என்பது

முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை தான்; நாம் தமிழர் கட்சியின் அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையையும் அதை நிறைவு செய்யும் சேவையும் தான்