சீமான்

தொடக்ககால வாழ்க்கை

திரு. சீமான் அவர்களது வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று அரசியல்; மற்றொன்று திரைத்துறை. ஐயா தொ. பரமசிவன் அவர்களிடத்து கற்ற மானுடவியல் பாடத்தை திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் முனைப்போடு சென்னை சென்றார். திரைத்துறைப் பணியில் ஈடுபட்டுக்கொண்ட பல அரசியல் இயக்கங்கள், கட்சிகளின்  மேடைகளில் பேசிவந்திருக்கிறார். மக்கள் உரிமைக்காக்கும்  பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளார். 

 
பல மேடைகளில், பல நாடுகளில் இனமான இயக்குநர் ஐயா மணிவண்ணன் அவர்களுடன் விடுதலைப்புலிகள் ஆதரவுப் பேச்சினை திரு.சீமான் பேசியுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை வாழ்க்கைத் துணையாக  ஏற்றுக்கொண்டார். 

அவர்களது திருமணவிழா தமிழ் முறைப்படி உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.