துயர் பகிர்வு!

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எனதருமை அண்ணன் கதிர் ராஜேந்திரன் அவர்களது தந்தையார் அப்பா சாத்தையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

நீண்டநெடுங்காலமாக எனது தோளுக்குத் துணையாக நிற்கும் எனதுயிர் அண்ணன் ராஜேந்திரன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பின் வலியறிந்து கலங்கி நிற்கிறேன். இத்துயரிலிருந்து மீண்டுவர அவருக்கு உளவியல் துணையாய் நின்று, அப்பாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.