நீதியரசர் பெருமதிப்பிற்குரிய ஐயா கிருபாகரன் அவர்கள் ஓய்வுபெறுகிற செய்தியறிந்தேன்.சமூக உணர்வையும், சாமானியர்களின் சனநாயகப் போராட்டங்களையும் மதித்து, அவர் வழங்கிய தீர்ப்புகள் யாவும் எக்காலத்திற்கும் முன்னுதாரணமாகத் திகழக்கூடிய வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தவையாகும். அவை யாவற்றையும் நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!  – சீமான்

அரசதிகாரத்தின் எதேச்சதிகாரப்போக்குகளால் ஒடுக்குமுறைக்குள்ளான எளிய மக்களின் ஆழ்மனக்குரலாய் ஒலித்து, அடித்தட்டு விளிம்புநிலை மனிதர்களுக்கும் நீதியை நிலைநாட்டி, அறநெறி வழுவாத் தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர் பெருமதிப்பிற்குரிய ஐயா கிருபாகரன் அவர்கள் ஓய்வுபெறுகிற செய்தியறிந்தேன்.

சமூக உணர்வையும், சாமானியர்களின் சனநாயகப் போராட்டங்களையும் மதித்து, அவர் வழங்கிய தீர்ப்புகள் யாவும் எக்காலத்திற்கும் முன்னுதாரணமாகத் திகழக்கூடிய வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தவையாகும். அவை யாவற்றையும் நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!

 

செந்தமிழன் சீமான்,

தலைமை ஒருங்கிணைப்பாளர்,

நாம் தமிழர் கட்சி.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.