சீமான்

வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் (2010)

 தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் “எனது மீனவனை அடித்தால் நான் உனது சிங்கள மாணவனை அடிப்பேன்” எனப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமானை ஜூலை 2010ஆம் ஆண்டு தமிழகக் காவல்துறை கைது செய்து அவரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேலூர் சிறைச்சாலையில் அடைத்தது. சீமானுக்கு நீண்ட காலமாகத் தமிழினம் தொடர்பான நூல் எழுதும் திட்டம் இருந்தது. ஆனால் அதற்காக அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. சிறையில் இருந்த காலகட்டதில் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி  பல்வேறு நூல்களைப்  படிப்பதிலும், குறிப்புக்களை எடுப்பதிலும் முழுக்கவனம் செலுத்திய அவர், தனது நூல் எழுதும் பணியையும் தொடங்கினார்.

தமிழ் தேசியத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, தமிழினம் ஏன் ஒடுக்கப்பட்டது? தமிழர்கள் எவ்வாறு தங்கள் இனப்பற்றை இழந்தார்கள், திராவிடம் எவ்வாறு தமிழினத்தை வீழ்த்தியது? என்பதற்கான வரலாற்று செய்திகளுடன் மிகப்பெரிய ஆவணமாக விளங்குவதுதான் இந்த நூல்.

அரசியல் என்பது

முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை தான்; நாம் தமிழர் கட்சியின் அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையையும் அதை நிறைவு செய்யும் சேவையும் தான்

திருப்பி அடிப்பேன் (2011)

 தமிழகத்தில் இருக்கும் ஈழ ஆதரவுத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் திரு. சீமான். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து அரசுக்கு எதிராக ஆவேச வாதங்களை எழுப்பியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் சீமான். ஐந்து மாத சட்டப் போராட்டத்துக்குப் பிறகு சிறை மீண்டுவந்த சீமான், ஜூனியர் விகடனில் ‘திருப்பி அடிப்பேன்!’ என்ற தலைப்பில் எழுதிய தொடர்தான் இங்கே நூலாகத் தொகுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நூலில், ஈழப் பிரச்சனை மட்டுமல்லாமல், பொதுவான அரசியல், வாக்குச் சுதந்திரம், மொழிப்பற்று, இளைஞர்களின் பங்களிப்பு என சமூக, அரசியல் மாற்றத்துக்கான தேவைகளை, சீமான் வலியுறுத்தியிருக்கும் விதம் அசாத்தியமானது. ஒவ்வொரு கட்டுரையையும் படித்துவிட்டு, ‘களத்துக்கு வரத் தயார்!’ என தமிழகம் முழுக்க எழுந்த  தன்னெழுச்சியே, சமூக மாற்றத்துக்கான சாட்சி! ஈழத் துயரங்களையும், தாய்த் தமிழகத்தில் நிகழும் சகிக்க முடியாத அரசியல் போக்கையும், கனல் தெரிக்கும் வார்த்தைகளால் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரைகள் இளைஞர்களை முறுக்கேற வைத்தன. ஒவ்வொரு கட்டுரையிலும் உக்கிரமாக வெடித்த சீமானின் வார்த்தைகள், அரசியல் மட்டத்திலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி, அரசியல் மாற்றத்துக்கான பெரும் போராக ஒவ்வொரு தமிழனையும் உசுப்பேற்றின! சீமானின் ஆவேச வீச்சை, உக்கிரம் குறையாதபடி பதிவு செய்திருக்கிறார் இரா.சரவணன். ஜூனியர் விகடனில், பற்றி எரியும் பரபரப்புத் தொடராக வெளிவந்த சீமானின் கட்டுரைகள், நிச்சயம் உங்களையும் அதே ஆவேசத்தோடு ஆட்கொள்ளும்!

அரசியல் என்பது

முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை தான்; நாம் தமிழர் கட்சியின் அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையையும் அதை நிறைவு செய்யும் சேவையும் தான்

சீமான்