சீமான்

பிறப்பு மற்றும் படிப்பு

 1966ஆம் ஆண்டு, நவம்பர் 08ஆம் நாள் சிவகங்கை மாவட்டம்,  இளையான்குடி வட்டத்தில் உள்ள அரனையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் பெற்றோர் செந்தமிழன் மற்றும் அன்னம்மாள் ஆகியோர்கள் ஆவர். 

இவர் 1987—1990ஆம் ஆண்டு சாகிர் உசேன் கல்லூரியில் பொருளாதார  இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த மறைந்த பேராசிரியர் ஐயா தொ. பரமசிவன் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது அவர்களிடம் படித்த  மாணவர்களில் ஒருவர்  திரு.சீமான்.  

திரு. சீமான் அவர்களுக்குள் தமிழுணர்வை விதைத்த பெருந்தகை ஐயா தொ. ப அவர்கள் என்றால் அது மிகையாகாது.