8THSeeman

சீமான்

அமைப்புமுறை மாற்றங்கள்:

  • அரசியல்வாதிகள் வேறு மக்கள் வேறு என்ற பொதுப் பார்வையை மாற்றியது;
  • சாதி மதம் கடந்து அனைத்துத் தரப்பட்ட தமிழ் மக்களின் உள்ளங்களில் இனப் பற்று எனும் தீயினைப் பற்றவைத்து அரசியிலில் ஈடுபடச் செய்தது;
  • மக்களுக்கான அரசியிலை மட்டும் இதரகட்சிகள் செய்து வந்த நிலையில், மண்ணுக்கான அரசியலையும் நாம் தமிழர் கட்சி மக்கள் மனதில் விதைத்தது;
  • ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு அநீதி மற்றும் உரிமைப் பறிப்பு ஏற்ப்பட்டாலும், தமிழ் மண்ணுக்கு எதிரான திட்டங்கள் நிறுவ முற்ப்பட்டாலும், ஆர்பாட்டங்கள் வாயிலாகவும் போராட்ட வடிவங்களாகவும் களத்தில் மக்களின் உரிமை குரலலாய் முதலில் திரு. சீமான் பதிவு செய்வது; 
  • கொள்கைதான் முதன்மையானது என்ற முழக்கத்தை பரவலாக்கியது;
  • “சாதிப் பார்த்து வாக்களிப்பது தீட்டு” என்று தேர்தல் பரப்புரை மேடைகளிலே பேசியது;
  • நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது; அது எழ்வர் விடுதலையானாலும் சரி, தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவது ஆனாலும் சரி. 

அரசியல் என்பது

முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை தான்; நாம் தமிழர் கட்சியின் அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையையும் அதை நிறைவு செய்யும் சேவையும் தான்

சீமான்

வனம் செய்வோம்! வளம் மீட்ப்போம்!! உயிர் காப்போம்!!!

நம் மண்ணின் அன்னைத்து வளங்களைக் காக்கவும், பல்லுயிர் நலனுக்காகவும், இன்றியமையாமையையும், சுற்றுச்சூழலையும் காப்பதற்க்காக உருவாக்கப்பட்ட பாசறையே இந்த நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை. வனம் செய்வோம்! வளம் மீட்ப்போம்!! உயிர் காப்போம்!!! என்ற மூன்று ஆகச்சிறந்த கோட்பாடுகளுடன் மரம் நடுதல், நீர்நிலைகளை துருவாருதல், நெகிழி ஒழிப்பு போன்ற சீரிய பணியினை மேற்கொண்டு வருகிறது.

பனைமரத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதன் பயன்கள்  குறித்தும் இடைவிடாது சீமான் சொன்னதற்கு பிறகுதான்  இன்றைக்குக் கருப்பட்டி காப்பிக் கடைகள் பெருநகரங்களில் மூலைமூடுக்கெல்லாம் முளைக்கத் தொடங்கின.

நெகிழி முற்றிலுமாக ஒழிப்பு என்று 2016 ஆட்சி செயற்பாட்டு வரைவில் சீமான் அறிவித்த மற்றொரு திட்டம் அன்னை தமிழகத்திற்கு அரசாணை ஆனது.