சீமான்

இராமேஸ்வர உரைவீச்சும் கைதும்

திரு. சீமானின் இராமேஸ்வர உரைவீச்சின் தாக்கம் இன்றுவரை தமிழர்கள் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த பேச்சு முடித்தபின் இராமநாதபுரம் கியூ-பிரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட திரு. சீமான், சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் கடவுச்சீட்டு மற்றும் பிணைபத்திரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு 30.10.2008 அன்று விடுதலை செய்யப்பட்டார். இன்றுவரை சீமானின் கடவுச்சீட்டு திருப்பிதரப்படவில்லை. இதன்பின் வெளிநாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல், காணொளிகாட்சி மூலமே வெளிநாட்டுவாழ் தமிழரிடையே உரையாற்றுகிறார்.

மீண்டும் சிறை

 2008 ஈரோட்டில் (14.12.2008) தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், `தமிழர் எழுச்சி உரை வீச்சு' என்ற தலைப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழக காங்கிரசார் குற்றம் சாட்டினர், இதனைத்தொடர்ந்து 19.12.2008ல் திரு. சீமான் உட்பட ஐயா பெ.மணியரசன், கொளத்தூர்மணி ஆகிய மூவர் திமுக அரசால் கைதுசெய்யப்பட்டனர். 

சீமான்

சீமான்

முல்லைப்பெரியாற்று நீர் உரிமை பிரச்சனை:

 2011 டிசம்பர் 20ஆம் தேதி முல்லைப்பெரியாற்று நீர் உரிமை பிரச்சனையில் தமிழர்களை தாக்கிய மலையாளிகளை எதிர்த்து போராட்டம் நடத்தி சிறைசென்றார்.