2014 மே 8 இல் சல்லிக்கட்டு மீதான தடை என்பது தமிழர் பண்பாட்டின் மீதான் அத்துமீறல் என்று சீமான் அறிக்கை வெளியிட்டார்.
25.5.2014 சீமான் நடத்திவந்த "மக்கள் முன்னால்" நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு பற்றிய விவாதத்தை நடத்தினார்.
ஆதாரம்; https://www.youtube.com/watch?v=5vTspDIKcbo
2015 சனவரி 16ல் சல்லிக்கட்டுக்கு அனுமதி தராவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சீமான் எச்சரித்தார்.
2016 சனவரி 19ல் மதுரை மாவட்டம் பாலமேட்டில் தடையைமீறி சல்லிக்கட்டு நடத்தவிருந்த சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
மார்ச் 23ஆம் தேதி சீமானால் வெளியிடப்பட்ட நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவில் சல்லிக்கட்டின் அவசியமும் நாட்டுமாட்டின் பாதுகாப்பும் பற்றி விரிவாக விளக்கம் தரப்பட்டிருந்தது.
ஆதாரம்: www.makkalarasu.in
27.12.2016 அலங்காநல்லூரில் போராட்டத்தை சீமான் துவக்கிவைத்தார்.
ஆதாரம்: https://www.youtube.com/watch?v=15sGf5558rE
11.01.2017 அன்று கடலூரில் திருவந்திபுரம் மலையை ஒட்டியுள்ள பகுதியில் நாம் தமிழர்கட்சி சார்பாக தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆதாரம்: https://www.youtube.com/watch?v=IappkxfBcsg
https://www.youtube.com/watch?v=ikp2j3z_ccc
17.01.2017 அன்று காலை அலங்காநல்லூர் உண்ணாநிலை போராட்டத்தின் பத்தாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தது காவல்துறை. இதனைத்தொடர்ந்து இச்செய்தி மளமளவென அண்டை ஊர்களில் பரவ மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து இளைஞர்கள் மெரினா கடற்கறையில் குவியத்துவங்கினர். அதுதான் தைப்புரட்சியின் முதல்நாள்.
2017 சனவரி 21ல் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் நாம் தமிழர் கட்சியால் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தப்பட்டது. சீமானின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சீமான் பரிசுகளும் வழங்கினார்!
ஆதாரம்: https://www.youtube.com/watch?v=qADyvk3dkd0
23.1.2017சல்லிக்கட்டு போராட்ட இறுதிநாளில் போலிசாரின் அடக்குமுறையை மீறி மெரினா கடற்கரையில் பட்டினியாய் போராடிய மாணவர்களுக்கு, போலீசாருக்கே தெரியாமல் மாற்றுவழியில் சென்று உணவு வழங்கினார் சீமான்.
07-02-2015 அன்று வீரத்தமிழர் முன்னணி என்ற கிளை அமைப்பினை சீமான் உருவாக்கினார். பண்பாட்டு மீட்சிக்காக இவ்வமைப்பு துவக்கப்பட்டதாக சீமான் அறிவித்தார். “பண்பாட்டு புரட்சி இல்லாது! அரசியல் புரட்சி வெல்லாது!!” என்ற தத்துவத்தை முன்வைத்து இவ்வமைப்பு இயங்கியது.
வீரத்தமிழர் முன்னணி என்று சீமான் தொடங்கி வைத்த பண்பாட்டு மீட்சி தஞ்சை பெரிய கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் தாய்த்தமிழை மீண்டும் கோபுரம் ஏற்றியது.
இவ்வமைப்பின் சார்பாக திருமுருகப் பெருவிழா, மாயோன் பெருவிழா, கண்ணகிப் பெருவிழா போன்ற தமிழர் மெய்யியல் விழாக்களும், கிராம பூசாரிகள் மாநாடு என்ற தமிழர் வழிபாடு குறித்த மாநாடும், மரபுவழி உழவு, உணவுத்திருவிழா, இளநீர் குடிக்கும் திருவிழா, வேல்பேரணி, காவடிபேரணி என பல விழாக்களும் நடத்தப்பட்டன.