விடுதலைச்சிறுத்தைகளின் துணைப்பொதுச்செயலாளர் தம்பி வன்னியரசு அவர்களின் தந்தையார் அப்பா ரத்தினசாமி அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி வன்னியரசுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், உயிருக்கினிய விடுதலைச்சிறுத்தைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!