பெரும்புகழ் பெற்ற கன்னட நடிகரான தம்பி புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தனித்துவமான நடிப்பாற்றலால் தன் தந்தையார் ராஜ்குமார் அவர்களைப் போலவே குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர்.

இவ்வளவு சிறிய வயதில் தம்பி புனித் ராஜ்குமார் அவர்களுக்கு நிகழ்ந்த மரணம் என்பது கொடுந்துயரமானது. தம்பியை இழந்து வாடும் தம்பி சிவராஜ்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இரசிகப் பெருமக்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.