மாண்புமிகு சேக் கலீபா பின் சயத் அல் நகியான் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்

துயர் பகிர்வு: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான மாண்புமிகு சேக் கலீபா பின் சயத் அல் நகியான் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அதிபராகப் பொறுப்பேற்ற தனது தந்தை சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு முன்னேறியதோடு அவருக்குப் பின்னால் சுமார் 18 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை வழங்கியவர் சேக் கலீபா. தமிழர்கள் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளின் தொழிலாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான கௌரவமான வாழ்வியல் சூழலை கொண்டுள்ள நாடுகளுள் முதன்மையானது ஐக்கிய அரபு அமீரகம். அச்சூழலை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார் ஐயா சேக் கலீபா. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கும், ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

 

 – செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.