புகழொளி மிளிரும் இசைப்பயணத்தில் 25வது ஆண்டினை நிறைவு செய்துள்ள என் தம்பி யுவன்சங்கர் ராஜா அவர்களுக்கு பெருமித வாழ்த்துகள்!

இளம் வயதில் இசைத்துறையில் நுழைந்து தன் தனித் திறமையால் வெற்றித்தடம் பதித்து , நம் செவிகளில் உற்சாகத்துள்ளலாய் ,ஆற்றுப்படுத்தும் ஆறுதலாய், நிமிர வைக்கும் நம்பிக்கையாய், உருக வைக்கும் காதலாய், ஊற்றெடுக்கும் தாலாட்டாய் தவழ்ந்து நம் வாழ்வின் சகலவிதமான சூழல்களிலும் சரிபாதியாய் இடம் பிடிக்கும் உயிராழம் கொண்ட தேனிசை தம்பி யுவனுடையது.

தன் தீந்தமிழ் பாடல்களால் திசையெங்கும் வீசுகிற காற்றை இனிக்க வைத்து , கேட்போர் மனங்களில் வற்றாத அருவியாய் கொட்டி தீர்க்கிற தம்பி யுவனின் இசை இன்னும் பல ஆண்டுகள் தமிழர் இதயங்களை நிரப்பி, புகழின் உச்சம் தொட வேண்டும் என்ற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காலங்களை வென்று நிற்கும் இசைப்படைப்புகளால் சாதனைப் பக்கங்களில் நிறைந்து ஒளிரும் இன்னிசை இளவரசன் என் அன்புத்தம்பி யுவன் சங்கர் ராஜா விற்கு எனது மனம் நெகிழ்ந்த அன்பினையும்,பூரிப்பு வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்!

Leave a Reply

Your email address will not be published.