வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடைவிதித்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும்!

வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடைவிதித்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும்!

தேனி மாவட்டம் மேகமலையில், மலையடிவார மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பதால், புல்வெளிகள் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடைவிதித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களை நம்பி தொன்றுதொட்டு ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொல்குடித் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நசித்து, அவர்களை வறுமையில் தள்ளுவதாக உயர்நீதிமன்றத்தின்…