உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அண்டை நாடுகள் மூலமாக மீட்கப்படும் வேளையில் தமிழகம் உள்ளிட்ட தென்னகப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன. போலந்து நாட்டிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத்துவம் அளித்து, தமிழ்நாடு போன்ற தென்னாட்டுப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை நாட்கணக்கில் காக்க வைப்பது…